விராட் கோலி சாதனைக்கு முட்டுக்கட்டை?: திராவிட் மீது ரசிகர்கள் கொந்தளிப்பு! 

ஒருநாள் போட்டியில் விராட் கோலியை சேர்க்காமல் விட்டதற்கு காரணம் திராவிட்தான் என சமூக வலைதளங்களில் டிரெண்டாகிறது. 
விராட் கோலி சாதனைக்கு முட்டுக்கட்டை?: திராவிட் மீது ரசிகர்கள் கொந்தளிப்பு! 
Published on
Updated on
1 min read

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 76 சதங்களை நிறைவு செய்துள்ளார். டெஸ்டில் 29, ஒருநாள் போட்டியில் 46, டி20யில் 1 என 76 சதங்கள் விளாசியுள்ளார். சச்சின் டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 49 என மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசி முதலிடத்தில் இருக்கிறார். 

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்டினை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரினையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 1-1 என சம்நிலையில் உள்ள இந்த தொடருக்கு இது முக்கியமான போட்டியாக உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் வரும்நிலையில் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை தந்து பரிசோதனை செய்து வருகிறது திராவிட்- ரோஹித் தலைமையிலான இந்திய அணி. 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் வரிசையில் விராட் கோலி 2ஆம் இடத்தில் இருக்கிறார். மே.இ.தீ. அணியுடனான போட்டியில் கோலிக்கு வாய்ப்பு மறுக்கபடுகிறதென அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மும்பை அணியினரின் ஆதிக்கம் பிசிசிஐயில் அதிகம் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மே.இ.தீ. அணிகளுக்கு எதிராக விராட் சதமடித்தால் இன்னும் விரைவாக சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் ட்விட்டரில் சேக் ரோவிட் (SACK ROVID) என்ற ஹேஷ்டேக்கினை பதிவிட்டு தங்களது மனக்குமுறலை பதிவிட்டு வருகின்றனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்கள் பட்டியல்: 

சச்சின் டெண்டுல்கர் - 100 
விராட் கோலி - 76 
ரிக்கி பாண்டிங் - 71 
குமார் சங்ககாரா- 63 
ஜாக் காலிஸ்- 62 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com