டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம்: ஸ்டோக்ஸ் பெருமிதம்!
By DIN | Published On : 01st August 2023 06:49 PM | Last Updated : 01st August 2023 07:37 PM | அ+அ அ- |

வெற்றியைவிட டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரசியம் முக்கியமென்பது இங்கிலாந்தின் தற்போதைய தாரக மந்திரம். பென் ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் அணி இதை நிரூபித்து வருகிறது.
இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் ப்ரத்யேகமான டெஸ்ட் போட்டிக் ஆஷஸ் டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. இரு அணிகளும் மிகத் தீவிரமாக விளையாடும் போட்டியாக உள்ளது. இரு நாட்டு பிரதமர்கள்கூட இதுப்பற்றி பேசியது சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
இதையும் படிக்க: அதிகமாக சம்பாதிப்பதால் இந்திய வீரர்களுக்கு ஆணவமா?: கபில் தேவ் கருத்துக்கு ஜடேஜா பதிலடி!

பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆஷஸ் போட்டி 2-2 என சம பலத்துடன் முடிவடைந்தது. எதிர்பாரா விதமாக இங்கிலாந்தின் வேகப் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வை அறிவித்தார். இந்தத் தொடருக்காக மட்டுமே மொயின் அலி ஓய்வில் இருந்து மீண்டு வந்து விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பேட்டிங் பயிற்சியில் வில்லியம்சன்: உலகக் கோப்பை கனவு நிறைவேறுமா?
இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டம் உலகம் முழுவதும் பிரபலமாக பேசப்பட்டது. ஆஸி. அணியை 5-0 என வீழ்த்தமுடியுமென எல்லாம் பேசப்பட்டது. ஆனால் தொடர் டிராவில் முடிந்தது. இருப்பினும் சிறந்த டெஸ்ட் தொடராக இருந்ததாக சச்சின், அஸ்வின் உள்பட பல கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஸ்டோக்ஸ் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினால்... : ஓய்வு குறித்து மொயின் அலி!
இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “ கடந்த 7 வாரங்களாக டெஸ்ட் கிரிக்கெட் நோக்கி புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம். இந்தத் தொடர்தான் உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தேவையானது. இரண்டு வலுவான அணிகள் அணுக்கமான போட்டியாக இருந்தது. போட்டியில் இருந்து கண்களை எடுக்க முடியாது. எல்லா செஷன் போட்டிகளும் அதற்குரிய வகையில் சிறப்பாக இருந்தது. எங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அடுத்து ஆஸி. அணி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

அதிகமான மக்கள் டிக்கெட்டுகள் வாங்கி ஆர்வமாக பார்த்தார்கள். சர்வதேச கிரிக்கெட்டினை காசு கொடுத்து பார்க்கும் மக்கள் எதிர்பார்ப்பதை நாங்கள் தருகிறோம். புதிய தலைமுறையை நாங்கள் மகிழ்வித்துள்ளோமென நினைக்கிறேன். 2005 தொடரில் எனக்கு ஏற்பட்ட அதே ஆர்வத்தை நானும் பிறருக்கு ஏற்படுத்த விரும்புகிறேன்” போட்டி முடிந்தப் பிறகு கூறினார். அது உண்மையும் என டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் தலையை ஆட்டாமல் இருக்க முடியாது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...