3-வது டி20: மே.இ.தீவுகள் பேட்டிங், இந்திய அணியில் ஜெய்ஸ்வால் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3-வது டி20: மே.இ.தீவுகள் பேட்டிங், இந்திய அணியில் ஜெய்ஸ்வால் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே, முதல் இரண்டு  போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிறது. இந்திய அணி  தொடரை இழக்காமலிருக்க இன்று வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இன்றையப் போட்டியில் இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுக வீரராக யசஸ்வி ஜெய்ஷ்வால் களமிறங்குகிறார். குல்தீப் யாதவ் அணியில் இணைகிறார். இஷான் கிஷன் இன்று விளையாடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com