பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

டி20 தொடர் இழப்பை தவிர்க்குமா இந்திய அணி?

இந்தியா  மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:07 pm

DIN

இந்தியா  மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி புரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகள் முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணி களம் காண்கிறது. 

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ள இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருக்கும் முனைப்போடு களம் காண்கிறது. 

இந்திய  அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கடந்த இரு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியான இரண்டு தோல்விகளால் இந்திய அணி வீரர்கள் விளையாடும் விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.