புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலகக் கோப்பை கிரிக்கெட்: 9 போட்டிகளின் தேதி மாற்றம்

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளின் தேதிகள் மாற்றப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஆகஸ்ட் 2023, 12:53 pm

DIN

இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளின் தேதிகள் மாற்றப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், பண்டிகை நாள்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 போட்டிகளின் தேதிகள் மாற்றப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

அக்டோபர் 15-ல் அமதாபாத்தில் நடக்கவிருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி அக்.14-ல் தேதியே நடைபெறும் என்றும், இந்தியா - நெதர்லாந்து போட்டி நவ.11க்கு பதில் நவ.12 ஆம் தேதியே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி ஆடவுள்ள 3 போட்டிகளின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.