மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மலிங்கா 139 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மொத்தமாக 195 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி ரேட் 7.12 ஆகும். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் வரிசையில் மலிங்கா 6-வது இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் மொத்தமாக 5 முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதில் 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு அங்கமாக மலிங்கா இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசராக செயல்பட்ட அவர் 2019 ஆம் ஆண்டு மீண்டும் அணியில் ஒரு வீரராக இணைந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக மலிங்காவின் கடைசி ஓவர் அமைந்தது.