பென் ஸ்டோக்ஸ் ஒரு சுயநலவாதி: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

பென் ஸ்டோக்ஸ் சுயநலமாக நடந்து கொள்வதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ஒரு சுயநலவாதி: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

பென் ஸ்டோக்ஸ் சுயநலமாக நடந்து கொள்வதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக அணியை வழிநடத்தி வரும் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்காக தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்று உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் சுயநலமாக நடந்து கொள்வதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் சுயநலமாக நடந்து கொள்கிறார். ஒருநாள் போட்டி ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளது சுவாரசியமாக இருக்கிறது. இந்த முடிவு நான், நான், நான் எனக் கூறப்படுவது போல் இருக்கிறதல்லவா? நான் எங்கு விளையாட வேண்டும் மற்றும் எப்போது விளையாட வேண்டும் என்பதை நான் என் வசதிக்கேற்ப முடிவு செய்து கொள்வேன். நான் பெரிய முக்கியமான போட்டிகளில் விளையாடுவேன் என்பதுபோல் இருக்கிறது. உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என இங்கிலாந்து வீரர்கள் பலர் ஓராண்டு காலமாக விளையாடி வருகின்றனர். அவர்கள் தற்போது பென் ஸ்டோஸுக்கு வழிவிட்டு வெளியில் உட்கார வேண்டும். இந்த ஓராண்டு காலம் விளையாடிய வீரர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள், நன்றி. ஆனால், நான் இப்போது விளையாட வேண்டும் என்றால் உங்களால் எனக்கு வழிவிட்டு வெளியே உட்கார முடியுமா? பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஹாரி ப்ரூக்கின் இடம் பென் ஸ்டோக்ஸுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹாரி ப்ரூக் டெஸ்ட் போட்டிகளில் பந்துகள் அடிப்படையில் வேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர். அவர் 1,058 பந்துகளில் 1000 ரன்கள் எடுத்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு இந்திய அணியின் ஆடுகளங்கள் வெற்றிக்கு சாதகமானதாகவே இருக்கும். அதனால் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கும் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டால் ஆஸ்திரேலியாவுக்கும் உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ளது என்றார்.

பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com