யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்ற அமெரிக்கா!

அமெரிக்காவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து அமெரிக்க கிரிக்கெட் அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. 
யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்ற அமெரிக்கா!

அமெரிக்காவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து அமெரிக்க கிரிக்கெட் அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. 

ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடருக்கு 15 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், தற்போது அமெரிக்கா அந்த வரிசையில் 16-வது அணியாக இணைந்துள்ளது. 

அமெரிக்க அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. கனடா அணி 10 புள்ளிகள் பெற்றுள்ள போதிலும், அமெரிக்க அணி கனடாவைக் காட்டிலும் ரன் ரேட்டில் அதிகமாக உள்ளது. அமெரிக்க அணியின் நெட் ரன் 4.84 ஆக உள்ளது. 

அமெரிக்க அணி தனது முதல் போட்டியில் பெர்முடாவை வீழ்த்தியது. ஆனால், கனடாவிடம் தோல்வியடைந்தது அந்த  அணிக்கு சிறிது பின்னடைவாக அமைந்தது. கனடாவுக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு மீண்டும் பெர்முடாவை வீழ்த்தினர். பிறகு, ஆர்ஜெண்டீனா அணியை இரண்டு முறை தோற்கடித்தனர். இந்த நிலையில், கனடாவுக்கு எதிராக முக்கியமான போட்டி நடைபெற்றது. மழை காரணமாக இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி 22 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த கனடா நிர்ணயிக்கப்பட்ட 22 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடருக்கும் தகுதி பெற்றது. 

19  வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com