

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது.
பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் சாம்பியன்!
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்த நிலையில், ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்தார் சஞ்சு சாம்சன். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் விளையாடிய ருதுராஜ் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதன்பின், களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் ஷிவம் துபே இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்குகிறது.
இதையும் படிக்க: இது மிகப் பெரிய சாதனை; ஐக்கிய அரபு அமீரகத்தை பாராட்டிய அஸ்வின்!
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாவும், தொடரை இழக்காமலிருக்க வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அயர்லாந்து அணியும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.