வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஹாரிஸ் ராஃப் பந்து வீச்சில் நொறுங்கிய ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் அபார வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

News image
படம்: ட்விட்டர் | பாகிஸ்தான் கிரிக்கெட்
Updated On :22 ஆகஸ்ட் 2023, 3:48 pm

DIN

பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியினை இலங்கையில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.1 ஓவரில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 61 ரன்கள் எடுத்தார். இப்திகார் அஹமது 30 ரன்களும் ஷதாப் கான் 39 ரன்களும் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பாக முஜீப் 3 விக்கெட்டுகள் எடுத்தார். நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

202 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கமே மோசமாக அமைந்தது. 3வது ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடி வீசிய ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. 4வது, 8வது ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தன. தற்போது குர்பாஜ் 14 ரன்களுடனும் மொஹமது நபி 3 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். 

இப்ரஹிம் ஜட்ரான், ரஹ்மது ஷா, ஷாகிதி ஆகிய மூன்று பேட்டர்களும் டக்-அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது. 12 ஓவரில் ஆப்கானிஸ்தான் 29/4 ரன்கள் எடுத்திருந்தது. 

பின்னர் சிறிது நேரத்திலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆப்கானிஸ்தான். ஹாரிஸ் ராஃப் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளும் நசீம் ஷா, ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

Story image


19.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 59 ரன்களுக்கு அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.