2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

நலமுடன் இருக்கிறேன்.. கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் அறிவிப்பு

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக முன்னாள் வீரர்  ஹென்றி ஒலோங்காவிடம் ஹீத் தெரிவித்துள்ளார்.

News image
ஹீத் ஸ்ட்ரீக்
Updated On :23 ஆகஸ்ட் 2023, 6:26 am

DIN

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக முன்னாள் வீரர்  ஹென்றி ஒலோங்காவிடம் ஹீத் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹீத் ஸ்ட்ரீக் சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை உயிரிழந்ததாக உலகம் முழுவதும் இன்று காலை செய்தி பரவியது.

முன்னாள் ஜிம்பாப்வே வீரரும் ஹீத்தின் நண்பருமான ஹென்றி ஒலோங்காவும், ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்.

Story image

இந்த நிலையில், காலை 10.30 மணியளவில் பழைய ட்வீட்டை நீக்கிய ஹென்றி, ஹீத் நலமுடம் இருப்பதாக பதிவிட்டு அவருடன் வாட்ஸ்அப்பில் உரையாடிய ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.

ஹீத் - ஹென்றி வாட்ஸ்அப் உரையாடல்

ஹீத் - ஹென்றி வாட்ஸ்அப் உரையாடல்

அந்த வாட்ஸ்அப் உரையாடலில், “நான் மிகவும் நலமாக இருக்கிறேன். ரன்அவுட்டை உடனடியாக திரும்பப் பெறுங்கள் நண்பா.” என்று ஹீத் விளையாட்டாக தெரிவித்திருந்தார்.

நலமுடன் இருப்பவர் உயிரிழந்ததாக பரவிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.