பாபர் அசாம் மிகச் சிறந்த வீரர்; ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்!

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம்  மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா புகழ்ந்துள்ளார். 
பாபர் அசாம் மிகச் சிறந்த வீரர்; ஆஸ்திரேலிய வீரர் புகழாரம்!

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம்  மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா புகழ்ந்துள்ளார். 

பாகிஸ்தான் அணி   ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாபர் அசாம் கேப்டனாக பாகிஸ்தானை  வழிநடத்தி வந்த நிலையில், தற்போது அணியை ஷான் மசூத் வழிநடத்தவுள்ளார். இருப்பினும், கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் அசாமின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம்  மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா புகழ்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அனைத்து வடிவிலான போட்டிகளிலும் உள்ள சிறந்த பேட்ஸ்மேன்களில் பாபர் அசாமும் ஒருவர். எங்களது காலத்தில் ஸ்டீவ் ஸ்மித் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் தொடர்களில் விளையாடுவது சிறப்பாக இருக்கும். பாபர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை ஒப்பிடுவது கிட்டத்தட்ட ஸ்மித் மற்றும் விராட் கோலியை ஒப்பிடுவது போன்றதே. பாபர் அசாம் பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் மைதானங்களிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் அவர் சதங்கள் அடித்துள்ளார்.

வலுவான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களான பாபர் அசாம், இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா சஃபீக் ஆகியோர் உள்ளனர். அவர்களிடம் எப்போதும் சிறந்த வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். உலகின் சிறந்த அணிகளில் பாகிஸ்தான் அணியும் ஒன்று. அவர்களுக்கு எதிரானப் போட்டியை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com