5-வது டி20: இந்தியா பேட்டிங்; தீபக் சஹார் அணியில் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 
5-வது டி20: இந்தியா பேட்டிங்; தீபக் சஹார் அணியில் இல்லை!

இந்தியாவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது. 

அர்ஷ்தீப் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். மருத்துவக் காரணங்களுக்காக தீபக் சஹார் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய அணியில் கிரீனுக்குப் பதிலாக எல்லிஸ் அணிக்குத் திரும்பியுள்ளார்.

ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் முனைப்பில் களம் காண்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com