டி20 போட்டிகளில் ஆஸி.க்கு எதிராக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா!

சர்வதேச டி20 போட்டிகளில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது.
டி20 போட்டிகளில் ஆஸி.க்கு எதிராக  அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்தியா!
Published on
Updated on
1 min read

சர்வதேச டி20 போட்டிகளில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் நிறைவு செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியின் வெற்றிக்குப் பிறகு டி20 போட்டிகளில்  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்தியா மாறியுள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றி பெற்ற அணிகள்

பாகிஸ்தான் - 20 வெற்றிகள் - நியூசிலாந்துக்கு எதிராக 
இந்தியா - 19 வெற்றிகள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
இந்தியா - 19 வெற்றிகள் - இலங்கைக்கு எதிராக
இந்தியா - 19 வெற்றிகள் - மேற்கிந்தியத்  தீவுகளுக்கு எதிராக
இங்கிலாந்து - 18 வெற்றிகள் - பாகிஸ்தானுக்கு எதிராக 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com