மேற்கிந்தியத் தீவுகளின் ஒப்பந்தத்தை நிராகரித்த வீரர்கள்

ஒப்பந்தத்தை நிராகரித்தாலும் சர்வதேச டி20 தொடர்களில் விளையாடுவார்கள் என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் ஒப்பந்தத்தை நிராகரித்த வீரர்கள்

மேற்கிந்தியத் தீவுகளின் மத்திய ஒப்பந்தத்தை முன்னாள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அமைப்பு, “2023-24ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தை ஜேஸன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளபோதும், சர்வதேச டி20 தொடர்களில் அவர்ந்து தொடர்ந்து விளையாடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியால் வெளியிடப்பட்டுள்ள ஆடவருக்கான பட்டியலில் பேட்டர்களான அலீக் அதனாஸ், கார்டி, சந்தர்பால் மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான குடகேஷ் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முன்னணி வீரர்கள் ஒப்பந்தத்தை ரத்துசெய்வது இது முதன்முறையல்ல. இதற்கு முன்பு போலார்ட், பிராவோ மற்றும் கிறிஸ் கெய்ல் போன்றவர்கள் 2010 காலகட்டங்களில் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனர்.

சமீபத்தில் கூட நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் அவரது ஒப்பந்தத்தை நிராகரித்தார். அதேபோல இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியுடனான 3 வருட ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, அதற்கு பதிலாக ஒரு ஆண்டு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com