மீண்டும் தில்லி கேப்டனாகும் ரிஷப் பந்த்?

ஐபிஎல் தொடர் 2024-ல் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

ஐபிஎல் தொடர் 2024-ல் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தில்லி தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இதனால், ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை.

தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள பந்த், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அவரை பிசிசிஐ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த ஐபிஎல் தொடரில் விளையாட போதும் பந்தை தில்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் விடுவிக்காமல் தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், வருகின்ற பிப்ரவரி மாத இறுதிக்குள் ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் தில்லி அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என்று அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பந்தின் கீப்பிங் குறித்து பிசிசிஐ ஆராய்ந்து ஒப்புதல் அளித்த பிறகே அவர் கீப்பிங் செய்ய முடியும் என்ற சூழல் உள்ளது.

ஐபிஎல் தொடருக்குள் கீப்பிங் செய்ய பிசிசிஐ ஒப்புதல் அளிக்காத பட்சத்தில், பேட்டிங்கில் மட்டும் பந்த் கவனம் செலுத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினீசர் இல்லாமல் திணறி வரும் சூழலில், ரிஷப் பந்தின் வருகை அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com