
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நிதீஷ் ராணா வழிநடத்தினார். இந்த நிலையில், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Quick Update #IPL2024 @VenkyMysore @ShreyasIyer15 @NitishRana_27 pic.twitter.com/JRBJ5aEHRO
â KolkataKnightRiders (@KKRiders) December 14, 2023
இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறியதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் அடுத்த சீசனில் அணியை கேப்டனாக வழிநடத்துவார். அணியின் துணைக் கேப்டனாக நிதீஷ் ராணா செயல்படுவார் என்றார்.
இந்த ஆண்டு நிதீஷ் ராணா தலைமையில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




