
இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரரான ஷுப்மன் கில் 12 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த திலக் வர்மா டக்கவுட்டானார். அடுத்து ஜெய்ஸ்வால்-சூர்யகுமார் ஜோடியினர் அதிரடியாக விளையாடினார்கள்.
இதையும் படிக்க: நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படும் ஆஸ்திரேலிய வீரர்!
ஜெய்ஸ்வால் அதிரடியாக 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கேப்டன் சூர்யகுமார் மிக அதிரடியாக விளையாடி தனது 4வது டி20 சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மேக்ஸ்வெல், ரோஹித்தின் சாதனையை சமன்செய்துள்ளார்.
இதையும் படிக்க: சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி!
தென்னாப்பிரிக்கா சார்பில் கேஷவ் மகாராஜா , லிஜாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பர்கர், ஷம்ஸி தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 201/7 ரன்கள் எடுத்தது. 1-0 என முன்னிலையில் உள்ள தென்னாப்பிரிக்க அணி தொடரினை கைப்பற்ற 202 ரன்கள் இலக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.