6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2-வது ஒருநாள்: தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
Updated On :19 டிசம்பர் 2023, 3:05 pm

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (டிசம்பர் 19) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 62 ரன்களிலும் (7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்), கே.எல்.ராகுல் 56 ரன்களிலும் (7 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 46.2 ஓவர்களில் 211  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

தென்னாப்பிரிக்கா தரப்பில் நண்ட்ரே பர்கர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பியூரன் ஹென்ரிக்ஸ் மற்றும் கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், வில்லியம்ஸ் மற்றும் மார்கரம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.