3-வது ஒருநாள்: இந்தியா பேட்டிங்; அறிமுகப் போட்டியில் ரஜத் படிதார்!
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி போலந்து பார்க் மைதானத்தில் இன்று (டிசம்பர் 21) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்கரம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கை விரலில் அடிபட்டுள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட் இன்றையப் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக தனது அறிமுகப் போட்டியில் ரஜத் படிதார் களமிறங்குகிறார். அதேபோல குல்தீப் யாதவுக்குப் பதிலாக யுஸ்வேந்திர சஹால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரஜத் படிதார் | படம்: பிசிசிஐ
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு இரு அணிகளும் களம் காண்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...