புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகள்!

ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ள அணிகளின் வரிசையில்  இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 3:02 pm

DIN

ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ள அணிகளின் வரிசையில்  இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றையப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. 

ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி 27 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் 30 வெற்றிகளைப் பதிவு செய்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகள்

ஆஸ்திரேலியா - 30 வெற்றிகள் (2003)
இந்தியா - 27 வெற்றிகள் (2023)
ஆஸ்திரேலியா - 26 வெற்றிகள் (1999)
தென்னாப்பிரிக்கா - 25 வெற்றிகள் (1996)
தென்னாப்பிரிக்கா - 25 வெற்றிகள் (2000)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.