தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது எப்போதும் கடினம்: ஷர்துல் தாக்குர்

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எப்போதும் கடினமானது என இந்திய அணியின் ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது எப்போதும் கடினம்: ஷர்துல் தாக்குர்

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எப்போதும் கடினமானது என இந்திய அணியின் ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20,  3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (டிசம்பர் 26) தொடங்குகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எப்போதும் கடினமானது என இந்திய அணியின் ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார். இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் பக்கத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக ஷர்துல் தாக்குர் கூறியதாவது: டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு மிகவும் கடினமான நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று என நினைக்கிறேன். உலகின் பல நாடுகளில் விளையாடினாலும், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்களின் தன்மை கணிக்க முடியாததாக இருக்கும். அதனால் போட்டி நடைபெறும் நாளில் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப பந்துவீச வேண்டும். தென்னாப்பிரிக்காவின் பருவநிலைக்கு ஏற்றவாறு தற்போது நான் மாறியுள்ளேன்.

கடல் மட்டத்திலிருந்து தென்னாப்பிரிக்கா உயரத்தில் அமைந்துள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் இருக்குமென்பதால் அதற்கேற்றவாறு என்னை மாற்றிக் கொண்டுள்ளேன். நீங்கள் பந்துவீச வேண்டும். ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் செய்ய வேண்டும். அதனால் தென்னாப்பிரிக்காவில் உள்ள பருவநிலைக்கு ஏற்றவாறு நமது உடலை தகவமைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com