தனது குடும்பத்துக்காக வீடு ஒன்று வாங்க வேண்டும் என விதர்பாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஷுபம் துபே தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். விதர்பாவைச் சேர்ந்த ஷுபம் துபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.5.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சையது முஸ்டாக் அலி கோப்பையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ஷுபம் துபே ஐபிஎல் ஏலத்தில் கவனம் பெற்றார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஷுபம் துபே கிரிக்கெட் கிட் வாங்குவதற்கே மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது குடும்பத்துக்காக வீடு ஒன்று வாங்க வேண்டும் என ஷுபம் துபே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷுபம் துபே பேசியதாவது: எனது குடும்பத்தினரால் எனக்கு ஒரு கிரிக்கெட் கிட் கூட வாங்கிக் கொடுக்க முடியாத சூழல். எனக்கு கிரிக்கெட் கிட் வாங்கித் தரவேண்டுமென என் தந்தை முயற்சி செய்தும் அவரால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலைகள் சரியில்லாதபோதிலும் அவர்கள் என்னை கிரிக்கெட் விளையாடக் கூடாது என ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது.

என் தந்தை சிறிய வேலைகள் செய்து குடும்பத்துக்கு வருமானம் ஈட்டுகிறார். எனது சகோதரன் குடும்பத்தின் தேவைகளை கவனித்துக் கொள்கிறான். எனக்கு காயங்கள் ஏற்படும்போது, எனது குடும்ப உறுப்பினர்கள் நேர்மறையான சிந்தனையோடு முன்னேறிச் செல்லுமாறு கூறுவார்கள். அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தர விரும்புகிறேன். முதலில் எனது குடும்பத்துக்காக ஒரு வீடு வாங்க ஆசைப்படுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

