இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடா்

இந்தியாவுடன் கேப் டவுணில் விளையாட இருக்கும் 2-ஆவது டெஸ்ட்டுக்கான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் அந்த ஆட்டத்துடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:43 pm

DIN

இந்தியாவுடன் கேப் டவுணில் விளையாட இருக்கும் 2-ஆவது டெஸ்ட்டுக்கான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டீன் எல்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் அந்த ஆட்டத்துடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அணியின் கேப்டன் டெம்பா பவுமா, முதல் டெஸ்ட்டின்போது காயம் கண்டதால் 2-ஆவது டெஸ்ட்டில் அவா் பங்கேற்கவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக அந்த ஆட்டத்தில் டீன் எல்கா் தலைமை தாங்குகிறாா். முதல் டெஸ்ட்டிலுமே பவுமா காயத்துடன் வெளியேறிய பிறகு எல்கா் கேப்டனாக செயல்பட்டாா். கேப் டவுண் டெஸ்ட்டில் பவுமாவுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க அணியில் ஜுபைா் ஹம்ஸா இணைகிறாா்.

இந்திய அணிக்கு அபராதம்

துபை, டிச. 29: தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்டில், பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் இரண்டும் குறைக்கப்பட்டது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்த வகையில் 2 ஓவா்கள் வீசியதால், ஓவருக்கு தலா 1 புள்ளி வீதம் 2 புள்ளிகள் இந்தியாவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணைகிறாா் ஜடேஜா?

செஞ்சுரியன், டிச. 29: முதுகுப் பிடிப்பு காரணமாக முதல் டெஸ்ட்டில் பங்கேற்காத இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா, 2-ஆவது டெஸ்ட்டில் களம் காண வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

முதல் டெஸ்ட்டின் 3-ஆவது நாள் ஆட்டம் தொடங்கும் முன்பாகவும், மதிய உணவு இடைவேளையின்போதும் அவா் பயிற்சியில் ஈடுபட்டாா். பிரதானமாக அவா் பௌலிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்தியா, 2-ஆவது டெஸ்ட்டை வசப்படுத்தும் முயற்சியாக அந்த ஆட்டத்தில் ஜடேஜா களமிறக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட்டில் அஸ்வின் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், ஆல்-ரவுண்டிங் வாய்ப்பாக ஜடேஜா சோ்க்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய அணியில் ஆவேஷ் கான்

செஞ்சுரியன், டிச. 29: தென்னாப்பிரிக்காவுடனான 2-ஆவது டெஸ்ட்டுக்கு முன்பாக, வேகப்பந்து வீச்சாளா் ஆவேஷ் கான் இந்திய அணியில் வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டுள்ளாா். முகமது ஷமிக்கான மாற்று வீரராக அவா் அணியில் இணைக்கப்பட்டுள்ளாா்.

ஆவேஷ் கான் இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் 38 ஆட்டங்களில் 149 விக்கெட்டுகள் சாய்த்திருக்கிறாா். தற்போது தென்னாப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட்டில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடி வந்த நிலையில், பிரதான அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

முதல் டெஸ்ட்டில் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு உதவியாக இதர வேகப்பந்து வீச்சாளா்கள் பங்களிக்க முடியாமல் போனதால், கேப் டவுண் டெஸ்ட்டில் ஆவேஷ் கானுக்கு இடம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

சறுக்கியது இந்தியா

துபை, டிச. 29: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 6-ஆம் இடத்துக்கு சறுக்கியது.

தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான் முறையே அடுத்த இரு இடங்களில் இருக்க, மேற்கிந்தியத் தீவுகள் 7-ஆம் இடத்திலும், இங்கிலாந்து 8-ஆம் இடத்திலும், இலங்கை 9-ஆம் இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.