அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஓய்வை அறிவித்த இயான் மார்கன்! 

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
கோப்புப் படம் (இயான் மார்கன்)
கோப்புப் படம் (இயான் மார்கன்)

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் இயான் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்தாண்டு ஜூன் 28ஆம் தேதி ஓய்வை தெரிவித்தார். 13 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த இயான் மார்கன் (36) இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 2019-இல் உலகக் கோப்பை வென்று கொடுத்தார்.2010-இல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்றபோது அதிலும் விளையாடியிருந்தார் மார்கன்.

7 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த மார்கன், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்தை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றார்.ஒருநாள் மற்றும் டி20யில் அதிக ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை மார்கன் பெற்றுள்ளார்.அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையிலும் மார்கனுக்கே முதலிடம்.

இதுவரை மொத்தம் 83 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள இயான் மார்கன் 1,405 ரன்கள் எடுத்துள்ளார். 

அபுதாபி டி10, எஸ்ஏ20 போன்ற தொடர்களில் விளையாடி வந்த மோர்கன் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். 

“2005இல் இங்கிலாந்துக்கு சென்று மிடிசெக்ஸ் அணிக்கு விளையாடியதி இருந்து எஸ்ஏ20 பார்ல் ராயல்ஸ் அணிக்கு விளையாடியது வரை ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடியுள்ளேன்.அனைத்து விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் உயர்வு தாழ்வு இருக்கும். ஆனால் எப்போதும் எனது குடும்பம் என்னுடன் இருந்தது. அவர்களுடன் நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது ஓய்வை அறிவிப்பது சரியாக இருக்குமென நம்புகிறேன். இருப்பினும் வர்ணனையாளர் போன்று எதாவது கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஒன்றில் தொடர்ந்து இருப்பேன்” எனவும் மார்கன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com