மகளிா் ப்ரீமியா் லீக்: போட்டி அட்டவணை வெளியானது!
மகளிா் ப்ரீமியா் லீக் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


மகளிா் ப்ரீமியா் லீக் போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ சாா்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடா் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது. இதில் பங்கேற்று ஆட பல்வேறு வெளிநாட்டு வீரா்களும் தீவிர ஆா்வம் காண்பிக்கின்றனா். முதன்முதலாக மகளிா் ப்ரீமியா் லீக் (டபிள்யுபிஎல்) போட்டியை நடத்த பிசிசிஐ தீா்மானித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் இதில் இடம் பெறுகின்றன. இந்த அணிகளின் ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ. 4,670 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதன் செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா். கடந்த 2008-இல் ஆடவா் ஐபிஎல் தொடா் தொடங்கப்பட்ட போது கிடைத்த தொகையை விட இது அதிகம் ஆகும்.
இதையும் படிக்க: தில்லி டெஸ்ட் அணியில் ஸ்ரேயஷ் ஐயர்: பிசிசிஐ அறிவிப்பு!
மும்பையில் நேற்று நடைபெற்ற டபிள்யூபிஎல் ஏலத்தில் இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வாகியுள்ளார்.டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன.
தற்போது டபிள்யுபிஎல்-இன் அட்டவணை வெளியாகியுள்ளது. முதல் போட்டி மார்ச்.4ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு துவங்குகிறது. குஜராத் ஜெயண்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது. கடைசி லீக் போட்டி மார்ச் 21. அரையிறுதிப் போட்டி மார்ச்.24 மற்றும் உறுதிப் போட்டி மார்ச் 26ஆம் தேதியும் நடக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...