கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

டெஸ்டில் அதிக சிக்ஸர்கள்: ஸ்டோக்ஸ் புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

Published On :

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 19 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள் உள்பட 31 ரன்களும் எடுத்தார் ஸ்டோக்ஸ். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு 101 டெஸ்டுகளில் 107 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார் நியூசிலாந்து முன்னாள் வீரரும் தற்போதைய இங்கிலாந்துத் தலைமைப் பயிற்சியாளருமான மெக்குல்லம். தற்போது 109 சிக்ஸர்களுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ஸ்டோக்ஸ். 100 சிக்ஸர்களுடன் 3-வது இடத்தில் உள்ளார் கில்கிறிஸ்ட். இந்திய வீரர்களில் 91 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார் சேவாக். 

டெஸ்ட்: அதிக சிக்ஸர்கள்

1. ஸ்டோக்ஸ் - 109 சிக்ஸர்கள்
2. மெக்குல்லம் - 107 சிக்ஸர்கள்
3. கில்கிறிஸ்ட் - 100 சிக்ஸர்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.