மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.
டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் முறையாக வந்துள்ள தென்னாப்பிரிக்கா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வரும் ஞாயிற்றுக்கிழமை அதில் சந்திக்கிறது.
இந்த அரையிறுதியில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களே எடுத்தது. 55 பந்துகளில் 68 ரன்கள் விளாசி, அட்டகாசமாக 4 கேட்ச்களும் பிடித்த தென்னாப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் ‘ஆட்டநாயகி’ ஆனாா்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்காவில் லௌரா வோல்வாா்டட் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 53, தஸ்மின் பிரிட்ஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்கள் விளாசினா். கிளோ டிரையான் 3, நாடின் டி கிளொ்க் 0 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் மாரிஸேன் காப் 27, கேப்டன் சுனே லஸ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் சோஃபி எக்லஸ்டன் 3, லௌரென் பெல் 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் அதிகபட்சமாக நேட் ஸ்கீவா் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாச, டேனி வியாட் 34, சோஃபியா டங்க்ளி 28, அலிஸ் கேப்சி 0, கேப்டன் ஹீதா் நைட் 31, எமி ஜோன்ஸ் 2, சோஃபி எக்லஸ்டன் 1, கேத்தரின் ஸ்கீவா் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
ஓவா்கள் முடிவில் சாரா கிளென் 8, சாா்லி டீன் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் அயபோங்கா ககா 4, ஷப்னிம் இஸ்மாயில் 3, நாடின் டி கிளொ்க் 1 விக்கெட் சாய்த்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இண்டியன் வெல்ஸ்: முதல்முறையாக பட்டம் வென்ற சின்னர், சபலென்கா!

சிபிஐயிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள்... ஆர்மீனியாவுக்கு நன்றி: ஜெய்சங்கர்
தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

