‘இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்படி?’- டிப்ஸ் கொடுத்த அஸ்வின்! 

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்தியாவில் டெஸ்ட் போட்டியை எப்படி விளையாட வேண்டுமென டிப்ஸ் கொடுத்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் 2-0 என் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. ஆஸி. அணி டெஸ்டில் சொதப்புவதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்திய மண்ணில் எப்படி விளையாட வேண்டுமென தெரியவில்லை என முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பாட் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார். அவருக்கு பதில் ஸ்மித் கேப்டனாக செயல்படுவாரென தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இந்திய ஆல் ரவுண்டர் ரவிசந்திரன் அஸ்வின் ஆஸி. பேட்டர்களுக்கு இந்திய மண்ணில் எப்படி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுமென தனது யூடியூப் பக்கத்தில் டிப்ஸ் கூறியுள்ளார். அஸ்வின் ஐசிசி பவுலர்  மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியதாவது: 

ஆஸி. பேட்டர்களுக்கு இந்தியாவில் எப்படி விளையாட வேண்டுமென தெரியவில்லை. இலங்கை அல்லது பாகிஸ்தானில் அந்த நாடு முழுவதும் ஒரே வகையிலான பிட்ச்தான் இருக்கும். ஆனால் இந்தியா அப்படியல்ல. துணைக்கண்டம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இங்கு மக்கள் இருக்கிறார்கள். இங்கு பல விதமான இடங்களில் பிட்ச் வெவ்வேறாக இருக்கும். கிழக்கில் ஒருமாதிரி, வடக்கில் ஒருமாதிரி. வெயிலுக்கு முன்பு ஒருமாதிரி வெயிலுக்கு பின்பு வேறொருமாதிரி இருக்கும். ஆடுகளத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். எப்போதும் அதிரடியாக விளையாட முடியாது. தேவையான நேரத்தில் தடுப்பாட்டம் ஆட வேண்டும். டெஸ்ட் போட்டி என்றால் அதுதானே. பொறுமை அவசியம். பலவிதமான நேரங்களில் ஏற்படும் அழுத்தங்களை தாங்க வேண்டும். அதனால்தான் இதற்கு டெஸ்ட் போட்டி. காலை வெயிலில் விக்கெட் இழக்காமல் விளையாடினால் பின்பு ஆடுகளம் சரியாகிவிடும். பிறகு அதிரடியாகக்கூட விளையாடலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com