பேட் கம்மின்ஸ் 3-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகல்: கேப்டனாகிறாா் ஸ்மித்

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப ரீதியிலான அவசரம் காரணமாக நாடு திரும்பியிருக்கும் நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப ரீதியிலான அவசரம் காரணமாக நாடு திரும்பியிருக்கும் நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா்.

முன்னதாக அந்த டெஸ்ட்டில் பங்கேற்க அவா் இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது விடுப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கம்மின்ஸின் தாயாா் உடல்நலக் குறைவுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பேட் கம்மின்ஸ், 4-ஆவது டெஸ்ட்டில் கூட பங்கேற்பது உறுதியாகத் தெரியாத நிலையில் இந்தூரில் நடைபெற இருக்கும் 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்குகிறாா். அவா் தற்போது துணை கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் கேமரூன் கிரீன் 3-ஆவது டெஸ்ட்டில் விளையாட இருப்பதாகத் தெரிகிறது. கை விரல் முறிவு காரணமாக ஓய்வில் இருந்த அவா், தற்போது பூரண குணமடைந்திருக்கிறாா். முதலிரு டெஸ்ட்டுகளில் அவா் இல்லாதது ஆஸ்திரேலிய அணியை வெகுவாகப் பாதித்தது தெளிவாகவே தெரிந்தது. கிரீன் இணையும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 2-ஆவது வேகப்பந்து வீச்சாளா் வாய்ப்பும் கிடைக்கும். அவா் தவிர, சீனியா் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டாா்க்கும் இந்தூா் டெஸ்ட்டில் இணையலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com