பந்துவீச்சாளர்களின் உத்தியை மாற்றிய திரிபாதி: பாண்டியா பாராட்டு!

பந்துவீச்சாளர்களின் உத்தியை மாற்றிய திரிபாதி: பாண்டியா பாராட்டு!

தனது அதிரடியான ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களின் உத்தியை மாற்றினார் என ராகுல் திரிபாதிக்குப் பாராட்டு...

3-வது டி20 ஆட்டத்தில் தனது அதிரடியான ஆட்டத்தால் பந்துவீச்சாளர்களின் உத்தியை மாற்றினார் என ராகுல் திரிபாதிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் இந்திய அணி கேப்டன் பாண்டியா.

சூர்யகுமாா் யாதவின் அதிரடி சதத்தால், இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. முதலில் ஆடிய இந்தியா 228/5 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் இன்னிங்ஸில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்களும் ஷுப்மன் கில் 46 ரன்களும் திரிபாதி 35 ரன்களும் எடுத்தார்கள்.

இந்திய அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார் திரிபாதி. இந்நிலையில் அவருடைய ஆட்டம் பற்றி இந்திய அணியின் கேப்டன் பாண்டியா கூறியதாவது:

சூர்யகுமார் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ராகுல் திரிபாதிக்கும் சிறப்புமிக்க பாராட்டுகள். அவர் காண்பித்த வேகம், அது அவருக்கு மிக இயல்பானது, ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியது. ஆரம்ப ஓவர்களில் பந்து ஏதோ செய்வது போல அடுத்து விளையாட இருந்த பேட்டர்களுக்குத் தோன்றியது. ஆனால் திரிபாதி சுறுசுறுப்பாக விளையாடி, ரன்கள் எடுத்ததால் பந்துவீச்சாளர்கள் நீளத்தை மாற்றிக் கொண்டார்கள். பந்து நகர்வது திடீரென  நின்று போனது. அதற்குப் பிறகு இலங்கை அணி எங்களை விரட்டுவது போல மாறிப் போனது இந்த ஆட்டம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com