
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் நடைபெறுவதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது அஸ்ஸாம் அரசு.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் குவாஹட்டியில் நாளை தொடங்கவுள்ளது. இதையடுத்து குவாஹட்டி நகர் அமைந்துள்ள கம்ருப் மாவட்டத்துக்கு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது அஸ்ஸாம் அரசு. அரசு அலுவலங்களும் கல்வி நிறுவனங்களும் மதியம் 1 மணிக்குப் பிறகு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறுவதால் இத்தொடரில் ரோஹித் சர்மா, கோலி, கே.எல். ராகுல், பும்ரா, பாண்டியா. சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ஷமி, சஹால் உள்ளிட்ட பிரபல வீரர்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






