பெயர்ஸ்டோ விக்கெட்டுக்கு அஸ்வின் கூறியது என்ன? 

இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ ஆட்டமிழந்த விதம் பேசுபொருளான நிலையில் அது குறித்து தமிழக வீரர் அஸ்வின் ட்வீட் செய்துள்ளார். 
பெயர்ஸ்டோ விக்கெட்டுக்கு அஸ்வின் கூறியது என்ன? 

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 5ஆம் நாளில் ஜானி பெயர்ஸ்டோ ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அதாவது பந்தை விட்டதும் கிரீஸில் தனது காலால் மித்திது விட்டு நடக்கத் தொடங்கி விடுவார். நடுவர்களோ யாருமே ஓவர் முடிந்து விட்டதற்கான சிக்னலை கொடுக்கும் முன்னமே வேகமாக கிரிஸை விட்டு நகர்ந்து விடுவார். கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை பிடித்ததும் தாமதிக்காமல் ஸ்டம்பினை நோக்கி அடித்து விடுவார். அவர் அடிக்கும் சமயத்தில் பெயர்ஸ்டோ வெளியே இருப்பார். அதனால் மூன்றாம் நடுவர் விக்கெட் என தீர்ப்பு வழங்கினார். 

ஒருபுறம் பென் ஸ்டோக்ஸ் இருக்க மறுபுறம் இந்த விக்கெட் மிக முக்கியமானதாக இருந்தது. ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்த இந்த விக்கெட்டினை இங்கிலாந்து ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் விவாதப் பொருளானது. இறுதியில் ஆஸி. அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அஸ்வின் ஐபிஎல்லில் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் விக்கெட்டினை ரன் அவுட் செய்வார். அதை மன்கட் என முன்பு அழைத்து வந்தனர். பௌலர் பந்தினை போடும்முன் பேட்டர் கிரீஸை விட்டு வெளியேறினால் பௌலர்கள் ஸ்டமினை அடித்து அவுட் ஆக்கலாம். இது மிகப்பெரிய விவாதத்தினை ஏற்படுத்தியது. தற்போது உலக அளவில் பலரும் இதை செய்து வருகின்றனர். 

பெயர்ஸ்டோ விக்கெட்டிற்கு அஸ்வின் என்ன கூறுவாரென உலகமே காத்திருந்தது. அஸ்வின் தனது ட்விட்டர் பகத்தில் கூறியதாவது: 

உண்மையை நாம் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்லியே ஆக வேண்டும். பெயர்ஸ்டோ செய்தது போல அடிக்கடி பந்தினை விட்டதும் கிரீஸை விட்டு வெளியேறுவதை அவரோ அவரது அணியினரோ கவனித்திருக்க வேண்டும். கீப்பர் தாமதிக்காமலே ஸ்டம்பினை நோக்கி அடித்து எடுத்த நியாயமான விக்கெட் இது. நாம் நிச்சயமாக இந்த விஷயத்தில் தனிப்பட்ட ஒருவரின் ஆட்ட நுணுக்கத்தினை பாராட்ட வேண்டுமே தவிர தவறாக விளையாடி விட்டார் அல்லது ஸ்பிரிட் ஆஃப் தி கேமை அழித்து விட்டார் எனவோ கூறக்கூடாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com