நான் பள்ளியில் படித்த பாடத்தினைப் போல ரிஷி சுனக் படிக்கவில்லை: ஆஸி. பிரதமர் கிண்டல்! 

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கினை ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி கிண்டல் செய்துள்ளார்.
நான் பள்ளியில் படித்த பாடத்தினைப் போல ரிஷி சுனக் படிக்கவில்லை: ஆஸி. பிரதமர் கிண்டல்! 

இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டிதான் ஆஷஸ். இதுவரை ஆஸ்திரேலியா அணி 34 தொடரினை வென்று முன்னிலையில் உள்ளது. 32 தொடரினை வென்ற இங்கிலாந்து சமீபகாலமாக ஆஸ்திரேலியாவுடன் தோல்வியை தழுவி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. 

2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ ஆட்டமிழந்தது குறித்து இங்கிலாந்து வீரர்கள், ரசிகர்கள் அதிருப்தி  தெரிவித்தனர். ஆனால் கிரிக்கெட் விமர்சகர்கள் விதிகளின்படி அது நியாயமான விக்கெட் என கருத்து கூறுகிறார்கள். தமிழக வீரர் அஸ்வின் உள்பட பலரும் ஆஸி. அணி செய்தது சரியென வாதிட்டு வருகின்றனர். 

இங்கிலாந்து நாளிதழ்களில் ஆஸ்திரேலிய அணியை, “முந்தைய அதே ஆஸ்திரேலிய அணி. ஏமாற்றுபவர்கள்” என விமர்சித்து எழுதியிருந்தார்கள். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸை குழந்தை போல எடிட் செய்து அழும் குழந்தைகள் என கிண்டலாக எழுதியிருந்தார்கள். இந்தப் பிரச்னை ரசிகர்களோடு மட்டும் நிற்காமல் இரு நாட்டு பிரதமர்களும் இது குறித்து பேசியுள்ளார்கள். 

பிரிட்டன் செய்தி தொடர்பாளர், “பிரதமர் ரிஷி சுனக், பென் ஸ்டோக்ஸ் சொன்னதற்கு ஒத்துப்போகிறார். ஆஸி. வெற்றி பெற்றதுபோல நான் வெற்றி பெற்றிருக்க மாட்டேன் எனக் கூறினார். ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்து மீண்டு வரும்” என்று தெரிவித்தார். 

இந்நிலையில், ஆஸி. பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி கூறியதாவது: 

ஆஷஸ் கிரிக்கெட்டில் நமது நாட்டின் ஆடவர், மகளிர் அணிகள் வென்றது பெருமையாக இருக்கிறது. ஆமாம் ஒரே மாதிரியான ஆஸி. அணி- எப்போதும் வெற்றிபெரும் அணி. ஆஸி. அணி மற்றும் அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் நேர்மையாக விளையாடினார்கள். நாட்டிற்கு கோப்பையுடன் வாருங்கள். 

ரிஷி சுனக்கின் வருத்தம் புரிகிறது. நான் தொடக்க பள்ளியில் பயின்ற கிரீஸ்க்கு உள்ளே இருங்கள் என்ற பாடத்தினை போன்று ரிஷி சுனக் படிக்கவில்லை போலும். ரிஷி சுனக் நலமாக இருப்பீர்களென நம்புகிறேன்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com