முதல் தர போட்டிகளில் அதிக சதம்: புஜாரா புதிய சாதனை! 

இந்தியாவில் முதல் தர போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

துலீப் கோப்பை போட்டியில் மேற்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் புஜாரா நல்ல ஃபார்மில் இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சரியாக விளையாடவில்லை. அடுத்து மே.இ.தீவுகள் அணிகளுக்கான இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மட்டும் சேர்க்காதது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் அணிகளுக்கான போட்டியில் டிரா ஆனாலும் இறுதிப் போட்டிக்கு மேற்கு மண்டலம் தேர்வாகியுள்ளது. துலீப் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலமும் - மேற்கு மண்டலமும் மோதவுள்ளன.

துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் புஜாரா 2வது இன்னிங்ஸில் சதமடித்ததால் முதல் தர போட்டியில் 60 சதங்களுடன் விஜய் ஹசாரே சாதனையை சமன் செய்துள்ளார். சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் 81 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர். 

முதல் தர போட்டியில் 60 சதங்கள், 76 அரை சதங்களுடன் 19,405 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

முதல் தர போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

சுனில் கவாஸ்கர்- 81 
சச்சின் டெண்டுலகர் - 81 
ராகுல் திராவிட் - 68 
செதேஷ்வர் புஜாரா- 60 
விஜய் ஹசாரே- 60 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com