வார்னருக்கு பதிலாக மாற்று வீரர் விளையாட வேண்டும்: முன்னாள் கேப்டன் அறிவுறுத்தல்!

4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னரை அணியில் சேர்க்க வேண்டியது குறித்து ஆஸி. அணி யோசிக்க வேண்டுமென முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கூறியுள்ளார்.
கோப்புப் படம் (வார்னர், நாசீர் ஹீசைன் )
கோப்புப் படம் (வார்னர், நாசீர் ஹீசைன் )

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே  நடைபெறும் ப்ரத்யேகமான டெஸ்ட் போட்டி ஆஷஸ் என அழைக்கப்படுகிறது. 2-1 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. 

அணியில் மாற்றங்களை செய்ததன் மூலம் 3வது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டெழுந்து வெற்றி பெற்றது. ஆஸி. அணியில் டேவிட் வார்னர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். 

இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட், டேவிட் வார்னரை 17 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். 3 போட்டிகளில் (6 இன்னிங்ஸில்) 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அடுத்தப் போட்டியிலும் ஆஸி. அணி தோல்வியுற்றால் தொடரினை இழக்க நேரிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசீர் ஹீசைன் கூறியதாவது: 

டேவிட் வார்னரை பற்றிய முடிவு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தப் போட்டியில் ஆஸி. வென்றால் தொடரினை வென்று விடலாம். டேவிட் வார்னரை விட்டு விலக வேண்டிய நேரமிது. ஆனால் ஆஸி.க்கு அவர் தேவைப்படுவார். 

என்னைப் பொருத்தவரை வார்னரை அணியில் இருந்து விலக்கிவிட்டு கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் விளையாட வேண்டும். தொடக்க வீரராக லபுஷேன் அல்லது மார்ஷினை விளையாட வைக்கலாம். மார்ஷ் வெள்ளைப் பந்துகளில் தொடக்க வீரராக விளையாடியுள்ளார். அவரால் முடியும். ஆனால் இது புதிய சவாலாக இருக்கும்.

டெஸ்ட்  பொட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்குவது சிறப்பான ஒன்றாகும். வருங்காலத்திற்குமாக ஆஸி. அணி யோசித்து முடிவெடுக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com