இது நிஜமாவே டெஸ்ட் போட்டிதானா? முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அதிரடி ஆட்டம்!

ஆஷஸ் 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 300  ரன்கள் எடுத்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது. 
இது நிஜமாவே டெஸ்ட் போட்டிதானா? முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அதிரடி ஆட்டம்!

ஆஷஸ் 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 300  ரன்கள் எடுத்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது. 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 19) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா 51 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டுவர்ட் பிராட் 2  விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், மார்க் வுட் மற்றும் மொயின் அலி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பென் டக்கெட் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து, ஸாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்தார் மொயின் அலி. இந்த இணை அதிரடியாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய மொயின் அலி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 82 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7  பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து, ஸாக் கிராலியுடன் இணைந்தார் ஜோ ரூட். இந்த இணை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக அதிரடியாக விளையாடியது. ஸாக் கிராலி பந்தினை பவுண்டரி அடித்த வண்ணமே இருந்தார். அதிரடியாக விளையாடிய அவர் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில், ஜோ ரூட்டும் தனது பங்குக்கு அதிரடி காட்ட இங்கிலாந்தின் ஸ்கோர் உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் கடந்தார். 

இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது. ஸாக் கிராலி 174 ரன்களுடனும், ஜோ ரூட் 60 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் வெறும் 17 ரன்களே பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com