மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் மகிழ்ச்சி: ஹேஸில்வுட்

பிரபல ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட் ஆஷஸ் போட்டியின்போது மழை வந்தால் நன்றாக இருக்குமென கூறியுள்ளார். 
மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் மகிழ்ச்சி: ஹேஸில்வுட்

ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து அணி முதலின்னிங்ஸில் 592 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாக் க்ராவ்லி 189 ரன்கள் எடுத்து அசத்தினார். பெய்ர்ஸ்டோ 99, ரூட்- 84, மொயீன் அலி- 54, ஸ்டோக்ஸ்- 51, புரூக்- 61 ரன்கள் எடுத்து அசத்தினர். ஹேஸில்வுட் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. அணி 3ஆம் நாள் முடிவில் 113 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

லபுஷேன்ன் 44 ரன்களும் மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடம் களத்தில் இருக்கிறார்கள். மீதமிருக்கும் இரண்டு நாள்களில் ஆஸி. அணி விக்கெட் விடாமல் இருந்தால் மட்டுமே ஆட்டத்தினை டிரா செய்ய முடியும். வெல்ல வேண்டுமானால் அதிரடியான் ஆட்டத்தினை விளையாட வேண்டும். அடுத்து இங்கிலாந்தையும் ஆல் அவுட் செய்ய வேண்டும். இது மிகவும் கடினாமான ஒன்றாகும். எனவே மழை குறுக்கிட்டால் ஆஸி. அணிக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. 

2023 இங்கிலாந்தில் நடைபெற்ற ஓவ்வொரு ஆஷஸ் போட்டியினன்றும் மழை பெய்துள்ளது. எனவே 4வது நாளான இன்றும் மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறியுள்ளார்கள். 

இந்நிலையில் பிரபல ஆஸ். வேகப் பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட், “மழை பெய்தால் உதவியாக இருக்கும். மழை பெய்வதற்கான வானிலை இருக்கிறது. ஆனால் அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. மழையும் சூரிய வெளிச்சமும் கிரிக்கெட்டில் எபோதும் முக்கியமான பங்கு வகிக்கும்.   நான் அங்கிருக்கும்போது மழை வந்து சிறிது ஓவர்கள் விளையாடாமல் கழிந்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் ஆஸி.2-1 என முன்னிலையில் இருக்கிறது. மழை வேண்டி யாராவது பிரார்த்தனை செய்தாலும் மகிழ்ச்சி” என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com