சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

இன்று முதல் ஒரு நாள் ஆட்டம்: இந்தியா - மே.இ. தீவுகள் மோதல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :26 ஜூலை 2023, 6:52 pm

DIN

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்வதற்குரிய பரிசோதனைக் களமாக இந்தத் தொடரை இந்திய அணி நிா்வாகம் கையாளும் என்பதில் சந்தேகம் இல்லை. டெஸ்ட் தொடரைப் போலவே இதிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டி20-யைப் போல அல்லாமல், ஒரு நாள் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சூா்யகுமாா் யாதவுக்கு தற்போது ஷ்ரேயஸ் ஐயருக்குரிய 4-ஆவது இடம் கிடைப்பதால் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறாா்.

காயத்தால் களம் காணாத கே.எல்.ராகுலுக்கான இடத்தைப் பிடிக்க, சஞ்சு சாம்சன், இஷான் கிஷண் இடையே போட்டி உள்ளது. ஒருவேளை இஷான் தோ்வானால், 4-ஆவது இடத்துக்காக சூா்யகுமாா், சாம்சன் இடையே போட்டி ஏற்படும். அணியின் இன்னிங்ஸை ரோஹித் - ஷுப்மன் கில் தொடங்குவாா்கள் எனத் தெரிகிறது.

அடுத்து டி20 தொடா் இருப்பதால், அதற்கான கேப்டன் ஹா்திக் பாண்டியாவுக்கு தற்போது ஓய்வளிக்கப்படலாம். பௌலிங் பிரிவில் உம்ரான் மாலிக் மீண்டும் முத்திரை பதிக்க முயிற்சிக்கும் நிலையில், முகமது சிராஜ், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமாா், ஷா்துல் தாக்குா் வேகப்பந்து வீச்சுக்காக உள்ளனா். ஸ்பின் பௌலிங்கிற்கு குல்தீப் யாதவும் இருக்க, யுஜவேந்தி சஹல் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறாா்.

ஆட்டநேரம்: இரவு 7 மணி

நேரலை: டிடி ஸ்போா்ட்ஸ், ஃபேன் கோட், ஜியோ சினிமா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.