இதுதான் என் இறுதிப் போட்டியாக இருக்கும்: ஓய்வு குறித்து மனம் திறந்த வார்னர்! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஓய்வு குறித்து பேசியுள்ளார். 
கோப்புப் படம் (டேவிட் வார்னர்)
கோப்புப் படம் (டேவிட் வார்னர்)

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர் (36). 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 8158 ரன்கள் எடுத்துள்ளார். 25 சதங்கள், 34 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 335 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் கடந்த 18 மாதங்களாக அவரால் ரன்கள் குவிக்க முடியவில்லை. 

ஜூன் 7ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் வார்னர் உள்ளார். அடுத்து ஆஸி. அணி ஜூன் 16 - ஜூலை 31 வரை இங்கிலாந்துடன் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. அதற்கடுத்து  டிசம்பரில் பாகிஸ்தான் அணியுடனும் , ஜனவரியில் மே.இ.தீவுகள் அணியுடனும் விளையாட உள்ளது. 

டேவிட் வார்னர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியதாவது: 

நான் எனக்கும் எனது குடும்பத்திற்கும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ரன்கள் அடித்தால் தொடர்ந்து விளையாடுவேன். நான் நிச்சயமாக மே.இ. தொடரினை விளையாடமாட்டேன். நான் இப்படியே தொடர்ந்தால் பாகிஸ்தான் தொடருடன் முடித்து விடுவேன். 

நான் எல்லா போட்டியையும் எனது இறுதிப் போட்டியாக நினைத்துதான் விளையாடுகிறேன். அதுதான் என்னுடைய ஸ்டைல். அணியுடன் இருப்பது பிடித்திருக்கிறது. இந்தியாவுடன் டெஸ்டில் ஆரம்பித்தது தற்போது இந்தியாவுடன் சவாலன போட்டியாக உள்ளது. 

நான் டி20 உலகக் கோப்பையை விளையாட வேண்டுமென நினைக்கிறேன். அதுதான் என் மனதில் திட்டமாக உள்ளது. அதற்கு முன்பு நிறைய கிரிக்கெட் விளையாட இருக்கிறது. பிப்ரவரியுடன் முடிந்தாலும் ஐபிஎல் மற்றும் பல கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com