உணவு இடைவேளைக்கு முன்னதாக 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் குவித்துள்ள இங்கிலாந்து!
ஆஷஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு முன்னதாக 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்துள்ளது.


ஆஷஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு முன்னதாக 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (ஜூன் 16) தொடங்கியது. இந்தப் போட்டி இங்கிலாந்தின் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிக்க: விஜய் பிறந்த நாளில் லியோ படத்தின் முதல் பாடல்!
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். பென் டக்கெட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, போப் களமிறங்கினார். போப் மற்றும் கிராலி சிறப்பாக விளையாடினர். இருப்பினும், போப் 31 ரன்களில் நாதன் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தபடியாக ஜோ ரூட் களமிறங்கினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஸாக் கிராலி அரைசதம் கடந்தார். அவர் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு முன்னதாக 26.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 20 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...