இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த ஸ்டூவர்ட் பிராட்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்கத்திலேயே தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.

News image
Updated On :17 ஜூன் 2023, 11:36 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்கத்திலேயே தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நேற்று (ஜூன் 16) முதல் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 17) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் டேவிட் வார்னர் போல்டானார். அவர் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் பந்தில் வார்னரை ஆட்டமிழக்கச் செய்த ஸ்டூவர்ட் பிராட் அடுத்த பந்தை சந்தித்த மார்னஸ் லபுஷேனை வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 29 ரன்களுக்கே தனது இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

தற்போது, உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவன் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.