ஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
ஆஷஸ் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


ஆஷஸ் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க: மெக்ஸிகோவை வதைக்கும் கடுமையான வெப்பம்: 100 பேர் பலி!
இந்த நிலையில், இன்று (ஜூன் 30) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹாரி ப்ரூக் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 68 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேர்ஸ்டோ (16 ரன்கள்), பிராட் (12 ரன்கள்), ராபின்சன் (9 ரன்கள்) மற்றும் ஜோஷ் டங் ( 1 ரன்) ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளையும், பாட் கம்ம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...