சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

டெஸ்ட்: இந்திய அணியின் பேட்டிங்கைத் தடுமாறச் செய்யும் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர்கள்!

இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2023, 6:15 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

இந்தூரில் நடைபெறும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் ஆஸி. அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். 

முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா இருமுறை அவுட் ஆக வாய்ப்பிருந்த போதும் நடுவரின் தவறால் தப்பிப் பிழைத்தார். ஆஸி. அணியும் டிஆர்எஸ்ஸைப் பயன்படுத்தாததால் நல்ல வாய்ப்பை இழந்தது. எனினும் தலா 3 பவுண்டரிகளில் அடித்து 12 ரன்களில் ரோஹித் சர்மாவும் 21 ரன்களிலும் ஷுப்மன் கில்லும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கோலி மட்டும் அதிகபட்சமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்து மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா 1 ரன், ஜடேஜா 4 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட், பரத் 17 ரன்கள் என இதர பேட்டர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.  

இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. 6 ரன்களுடன் அக்‌ஷர் படேலும் 1 ரன்னுடன் அஸ்வினும் களத்தில் உள்ளார்கள்.  லயன், குனேமன் தலா 3 விக்கெட்டுகளும் மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.