தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

109 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: முதல் நாளில் முன்னிலை பெற்று ஆஸி. அணி ஆதிக்கம்!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

News image
Updated On :1 மார்ச் 2023, 12:23 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்தூரில் நடைபெறும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் ஆஸி. அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைத் தாண்டிச் சென்று முன்னிலை பெற்றுள்ளது. ஹெட் 9 ரன்களிலும் லபுஷேன் 31 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். கவாஜா - லபுஷேன் அருமையான கூட்டணி அமைத்து இந்திய அணியை வெறுப்பேற்றினார்கள். இருவரும் 198 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார்கள். இதனால் ஆஸி. அணியால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற முடிந்தது. 60 ரன்கள் எடுத்த கவாஜா, ஜடேஜா பந்தில் ஸ்வீப் செய்து ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஸ்மித்தையும் வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. இந்திய அணியின் மூன்று ரெவ்யூக்களையும் ஜடேஜா வீணடித்தாலும் இன்று ஆஸி. அணியின் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா தான் வீழ்த்தினார்.

Story image

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 54 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்காம்ப் 7, கிரீன் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸி. அணி 6 விக்கெட் மீதமுள்ள நிலையில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணியின் இன்னிங்ஸில் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா இருமுறை அவுட் ஆக வாய்ப்பிருந்த போதும் நடுவரின் தவறால் தப்பிப் பிழைத்தார். ஆஸி. அணியும் டிஆர்எஸ்ஸைப் பயன்படுத்தாததால் நல்ல வாய்ப்பை இழந்தது. எனினும் தலா 3 பவுண்டரிகளில் அடித்து 12 ரன்களில் ரோஹித் சர்மாவும் 21 ரன்களிலும் ஷுப்மன் கில்லும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கோலி மட்டும் அதிகபட்சமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்து மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா 1 ரன், ஜடேஜா 4 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட், பரத் 17 ரன்கள் என இதர பேட்டர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.  

இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. 6 ரன்களுடன் அக்‌ஷர் படேலும் 1 ரன்னுடன் அஸ்வினும் களத்தில் இருந்தார்கள்.  

இதற்குப் பிறகு இந்திய அணியின் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளும் வீழ்ந்தன. அஸ்வின் 3 ரன்கள், உமேஷ் யாதவ் 17 ரன்களும் எடுத்தார்கள். சிராஜ் டக் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் 13 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. மேத்யூ குனேமன் 5 விக்கெட்டுகளும் லயன் 3 விக்கெட்டுகளும் மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.