இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இருப்பினும், ஆஸ்திரேலிய அணியின் நாதன் லயனின் சுழலில் சிக்கி இந்திய அணி நிலை குலைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில் உள்பட பல முக்கிய விக்கெட்டுகளையும் தனது சுழலில் அவர் சிக்கவைத்தார்.