கவாஜா அரை சதம்: இந்திய அணிக்குச் சவாலாக இருக்கும் ஆஸி. பேட்டர்கள்!

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
கவாஜா அரை சதம்: இந்திய அணிக்குச் சவாலாக இருக்கும் ஆஸி. பேட்டர்கள்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸி. அணியில் மாற்றம் எதுவுமில்லை. இந்திய அணியில் சிராஜுக்குப் பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்டும் உஸ்மான் கவாஜாவும் நன்கு விளையாடினார்கள். இதனால் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. விரைவாக ரன்கள் குவித்து 7 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த ஹெட், அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு லபுஷேனை 3 ரன்களுக்கு போல்ட் செய்தார் ஷமி. 

மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. கவாஜா 27, ஸ்மித் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு கவாஜாவும் ஸ்மித்தும் நிதானமாகவும் கவனமாகவும் பொறுப்புடனும் விளையாடி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார்கள். 40 ஓவர்களுக்கு மேல் இணைந்து விளையாடி 79 ரன்கள் வரை சேர்த்தார்கள். கவாஜா 146 பந்துகளில் அரை சதமெடுத்தார். 135 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் எடுத்த ஸ்மித், ஜடேஜா பந்தில் போல்ட் ஆனார்.

ஆஸ்திரேலிய அணி 70 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 68, ஹேண்ட்ஸ்காம்ப் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com