சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை எட்டிய 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ரோஹித் சர்மா.

News image
Updated On :11 மார்ச் 2023, 5:34 am

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை எட்டிய 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது. 

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்களில் 480 ரன்கள் எடுத்தது. கவாஜா 180, கிரீன் 114 ரன்கள் எடுத்தார்கள். அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று விளையாடி வருகிறது.

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 58 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களைக் கடந்த 7-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: இந்தியர்கள்

1) சச்சின் - 34357 
2) கோலி - 25047 
3) டிராவிட் - 24208 
4) கங்குலி - 18575 
5) தோனி - 17266
6) சேவாக் - 17253 
7) ரோஹித் சர்மா - 17014

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.