3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் சதம் விளாசிய விராட் கோலி! (புள்ளிவிவரம்)
3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.


3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது ஆட்டத்தினைத் தொடர்ந்தது. விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தினை தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: 1000 நாள்களுக்குப் பிறகு டெஸ்டில் சதம் விளாசிய விராட் கோலி!
அதன்பின், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரீகர் பரத். இருவரும் இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவருடைய 28-வது சதமாகும். விராட் கோலி 1205 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் தனது சதத்தினைப் பதிவு செய்துள்ளார்.
விராட் கோலி கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் தனது சதத்தினைப் பதிவு செய்திருந்தார். அதன்பின், இன்று (மார்ச் 12) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.
விராட் கோலியின் சதம் தொடர்பான சில புள்ளி விவரங்கள்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான விராட் கோலியின் இன்றைய சதம் அவரது 28-வது டெஸ்ட் சதமாகும்.
அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளில் இந்த சதம் அவருடைய 75-வது சதமாகும்.
இன்றையப் போட்டியில் 241 பந்துகளில் விராட் கோலி சதமடித்துள்ளார்.
289 பந்துகள் (இங்கிலாந்து, 2012)
241 பந்துகள் (ஆஸ்திரேலியா, 2023)
214 பந்துகள் (ஆஸ்திரேலியா, 2018)
199 பந்துகள் (ஆஸ்திரேலியா, 2012)
199 பந்துகள் (ஆஸ்திரேலியா, 2013)
இரண்டு டெஸ்ட் சதங்களுக்கு இடையே விராட் கோலி எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ் விவரம்
41 இன்னிங்ஸ் - 27-வது மற்றும் 28-வது சதத்துக்கு இடையில்
11 இன்னிங்ஸ் - 11-வது மற்றும் 12-வது சதத்துக்கு இடையில்
10 இன்னிங்ஸ் - 6-வது மற்றும் 7-வது சதத்துக்கு இடையில்
10 இன்னிங்ஸ் - 25-வது மற்றும் 26-வது சதத்துக்கு இடையில்
சர்வதேசப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் விவரம்
சச்சின் டெண்டுல்கர் - 20 சதங்கள் (ஆஸ்திரேலியா)
டான் பிராட்மேன் - 19 சதங்கள் (இங்கிலாந்து)
சச்சின் டெண்டுல்கர் - 17 சதங்கள் (இலங்கை)
விராட் கோலி - 16 சதங்கள் (ஆஸ்திரேலியா)
விராட் கோலி - 16 சதங்கள் (இலங்கை)
இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8358 ரன்கள் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 254 ஆகும். அவரது பேட்டிங் சராசரி 48.88 ஆகும். 7 இரட்டை சதங்கள், 28 சதங்கள், 28 அரைசதங்கள் அடித்துள்ளார். 936 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...