1000 நாள்களுக்குப் பிறகு டெஸ்டில் சதம் விளாசிய விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 28 டெஸ்ட் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 28 டெஸ்ட் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்திருந்தது. விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, விராட் கோலியுடன் ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி டெஸ்டில் தனது 28-வது சதத்தினை அடித்து அசத்தினார். அவர் 241 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். அனைத்து வடிவிலான போட்டிகளில் விராட் கோலியின் 75-வது சதம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...